பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க கோரிக்கை

பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-08 19:00 GMT

அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி வாழும் பகுதியாகும். கோடை காலமான இக்காலத்தில் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மழை பெய்தது. இப்பகுதியில் முருங்கை, நெல், கம்பு, சோளம் மற்றும் காய்கறிகளை பயிரிட்டு வருகிறார்கள். குறிப்பாக முருங்கை சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் கால்நடை வளர்ப்பும் அதிக அளவில் உள்ளது. தற்போது முருங்கை பூ பூத்து அதிகளவு முருங்கை விளைச்சல் உள்ளது. முருங்கை மரங்களில் அதிக அளவு பூச்சி தாக்குதல் உள்ளது. குறிப்பாக பிஞ்சு முருங்கை காய்களில் பூச்சி தாக்குதல் உள்ளது. எனவே முருங்கை மரங்களில் பூச்சி தாக்குதல்களை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி அரசு சார்பில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும். குறிப்பாக காய்கறி பயிர்களில் பூச்சி தாக்குதலில் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே இது தொடர்பாக விவசாயிகளுக்கு அரசு சார்பில் பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்