பர்கூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-07-02 19:30 GMT

பர்கூர்:

பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளி மத்தூர் கூட்ரோட்டில் உள்ள மாந்தோப்பில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த டாஸ்மாக் கடையில் விற்பனையாளரை பாரில் வேலை செய்த நபரை தாக்கி ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த டாஸ்மாக் கடையில் மது வாங்கும் மதுப்பிரியர்கள் ஆங்காங்கே குடித்துவிட்டு பல்வேறு வாகனங்களில் விபத்துகளில சிக்குகின்றனர். இந்த கடையை அகற்றகோரி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்ககள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே சிகரலப்பள்ளி மத்தூர் கூட்ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்