திருவாடானை அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. சி.டி.ஸ்கேன் வசதி செய்து தர கோரிக்கை
திருவாடானை அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. சி.டி.ஸ்கேன் வசதி செய்து தர கோரிக்கை வைக்கப்பட்டது.
தொண்டி,
திருவாடானை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- திருவாடானையில் தாலுகா ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே வசதியை தவிர ஸ்கேன் வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் இத்தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் சி.டி.ஸ்கேன் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சேவையை பெறுவதற்கு இங்கிருந்து மாவட்ட தலைநகர் ராமநாதபுரத்திற்குதான் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் மக்களுக்கு வீண் அலைச்சல்களுக்கும் மற்றும் பொருளாதார இழப்புகளையும் சந்திக்க வேண்டிய நிலையும், கால விரயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் திருவாடானை ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.