மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி-விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம்

மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர் ஊர்வலம் சிவகங்கையில் நடைபெற்றது.

Update: 2023-01-28 18:45 GMT


விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசு அறிவித்த கொள்முதல் விலை வழங்க வேண்டும், மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர் ஊர்வலம் சிவகங்கையில் நடைபெற்றது. சிவகங்கை ராமச்சந்திரனார் பூங்காவில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்திற்கு மாவட்ட செயலாளர் காமராஜ், தலைவர் வீரபாண்டி, ஆகியோர் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் முத்துராமு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட துணை செயலாளர்கள் அண்ணா துரை, ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர்கள் ஜெயராமன், அழகர்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கண்ணகி, துணை செயலாளர் கோபால், மற்றும் மணி, மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்