கல்வி நிறுவனங்களில் குடியரசு தினவிழா

ராணிப்பேட்டை, ஆற்காடு கல்வி நிறுவனங்களில் குடியரசு தினவிழா நடந்தது.

Update: 2023-01-27 18:38 GMT

காவனூரில் உள்ள வித்யா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சம்பத்து மூப்பனார் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி எஸ். தாமரைச்செல்வி, எஸ்.குணசேகர் ஆகியோர் வரவேற்றனர். ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.ரஞ்சித் குமார் தேசிய கொடி ஏற்றினார். நிர்வாக குழு தலைவர் என்.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். பேச்சு போட்டி, பாட்டு போட்டி நடந்தது. முடிவில் தலைமை ஆசிரியர் எம்.அமுதா நன்றி கூறினார்.

ஆற்காடு வேத நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் கே.நிறைமதி அழகன் தேசியக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். மாணவ -மாணவிகள் கொடி பாட்டு பாடினர். உடற்பயிற்சி, யோகா, கராத்தே மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஆற்காடு டி.எல்.ஆர். கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கல்வி நிறுவனத் தலைவர் டி.எல்.ரவி, தாளாளர் கோமதிரவி தலைமை வகித்தனர். கல்வியியல் கல்லூரி முதல்வர் திலகவதி, முதல்வர் நிர்மலா முன்னிலை வகித்து தேசியக் கொடி ஏற்றினர். பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்