ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா பள்ளிகளில் குடியரசு தின விழா

ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-26 18:42 GMT

பாலூர், மாதனூர், மராட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா பள்ளிகளில் குடியரசு தின விழா நடைபெற்றது. பள்ளிகளின் தாளாளர் டாக்டர் கே.தெய்வசிகாமணி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றினார்.

பள்ளி முதல்வர்கள் முரளிதரன், சென்மூர்த்தி, கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியரசு தின விழா கலை நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் வழங்கப்பட்டது. முடிவில் துணை முதல்வர் எஸ்.மூர்த்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்