பழுதடைந்த மின்விளக்குகள் சரி செய்யும் பணி

வேலூர் கோட்டை பூங்காவில் பழுதடைந்த மின்விளக்குகள் சரி செய்யும் பணி நடந்தது.

Update: 2023-02-07 16:53 GMT

வேலூர் கோட்டை சுற்றியுள்ள மதில் சுவர் இரவிலும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் அமைக்கப்பட்ட பூங்கா பகுதியில் புற்கள் வளர்ந்து இருந்தது.

இந்த நிலையில் வேலூர் மக்கான் சிக்னலில் இருந்து புதிய மீன் மார்க்கெட் செல்லும் சாலையில் அகழியோரம் உள்ள செடி, கொடிகள் மற்றும் குப்பைகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

அப்போது அங்குள்ள மின்விளக்குகளின் ஒயர்கள் பற்றி எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

இதனால் அந்த மின் விளக்குகள் எரியவில்லை.

இந்த நிலையில் இன்று மாநகராட்சி ஊழியர் ஒருவர் பழுதான மின் விளக்குகள் ஒயர்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

தொடர்ந்து கோட்டை மதில் சுவரில் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்