கட்டுமாவடியில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கட்டுமாவடியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டது.

Update: 2023-01-19 18:45 GMT

திட்டச்சேரி,

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கட்டுமாவடியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டது.

குழாய் உடைந்தது

திருமருகல் அருகே நாகூர்- நன்னிலம் சாலை வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது.இந்த குழாய் மூலம் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கட்டுமாவடியில் திட்டச்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருந்தது.

வீணாகும் குடிநீர்

இதன் காரணமாக குடிநீர் அதிக அளவில் வெளியேறி சாலையில் ஓடி வீணாகி வந்தது.இதனால் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருந்தது.மேலும் சாலைகளில் குடிநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து வந்தனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சீரமைப்பு

இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 18-ந் தேதி படத்துடன் பிரசுரமானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை பொக்லின் எந்திரம் மூலம் சீரமைத்தனர்.

இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்