சேதமடைந்த சுவரை சரி செய்ய வேண்டும்

சேதமடைந்த சுவரை சரி செய்ய வேண்டும்

Update: 2023-06-15 11:58 GMT

காங்கயம்

சிவன்மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவில் சுவர் இடிந்து விழுந்து சேதமானதை சரிசெய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சிவன்மலை அடிவாரப் பகுதியில் வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த பொங்கல் விழாவில் போது சிவன்மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நீலக்காட்டுபுதூர், குருக்கத்தி, காட்டூர், பல்லக்காட்டுபுதூர், சரவணா நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் என திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபடுவர். மேலும் மாவிளக்கு, பூவோடு எடுத்துவருத்தல், கிடாவெட்டு உட்பட பல நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். இந்த கோவில் மிகப்பழமையான கோவில் என்பதால் தற்போது இந்த கோவிலின் சுற்றுச்சுவர் இடிந்தும், பின்புற கதவு சேதமாகி உள்ளது. இதனால் கோவிலுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் உடனடியாக கோவில் சுவற்றை புதுப்பிக்க வேண்டும், பக்தர்களுக்கு தேவைப்படும் வசதியை செய்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்