சீரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம்-புதிய கழிவறை
சீரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம்-புதிய கழிவறை
தஞ்சை மாநகராட்சி 29-வது வார்டு மானம்புச்சாவடி ரெசிடென்சி பங்களா ரோட்டில் ரூ.7½ லட்சம் செலவில் அங்கன்வாடி மைய கட்டிடம் சீரமைக்கப்பட்டது. அதேபோல் சின்னையா பாளையம் பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் புதிய கழிவறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த 2 கட்டிடங்கள் திறப்பு விழா நேற்றுகாலை நடந்தது. புதிய கட்டிடங்களை தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.முன்னதாக மாநகராட்சி கவுன்சிலர் ஸ்டெல்லா நேசமணி வரவேற்றார். விழாவில் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாநகர செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், மண்டலக் குழுத் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, மேத்தா, ரம்யா சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.