மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி பகுதியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்கி வருவதாக புகார் எழுந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக தர்மபுரி உதவி கோட்ட பொறியாளர் கவிதா, பாலக்கோடு நெடுஞ்சாலைகள் துறை உதவி பொறியாளர் நவீன் குமார் தலைமையிலான சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள், பேரூராட்சி ஊழியர்கள் கொண்ட 30 க்கும் மேற்பட்ட குழுவினர் நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் மொரப்பூர்- மாரண்டஅள்ளி சாலை, மாரண்டஅள்ளி-பஞ்சப்பள்ளி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். மேலும் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாலக்கோடு உதவி பொறியாளர் எச்சரிக்கை விடுத்தார்.