சிமெண்டு குழாயை அகற்ற வேண்டும்
சிமெண்டு குழாயை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் பழைய தேரடி பகுதியில் சாலையோர நடைபாதையிலேயே பல மாதங்களாக உபயோகத்தில் இல்லாத சிமெண்டு குழாய் அகற்றப்படாமல் கிடக்கிறது. இதனால் நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் இந்தச் சிமெண்டு உருளைக்குழாயை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.