நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

Update: 2023-02-21 18:45 GMT

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இங்குள்ள கடை வியாபாரிகள், பயணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக கடைக்கு முன்புற பகுதியில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து ஷெட் அமைத்து கடைகளை விரித்து வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

இதுபற்றி நகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா அறிவுரைப்படி, புதிய பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்புகளை நேற்று காலை நகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பயணிகளுக்கு இடையூறாக நடைபாதைகளை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்