திருவையாறு
திருவையாறை அடுத்த கண்டியூரில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஹரசாப விமோசன பெருமாள் கோவிலுக்கு சொந்தமான கபால புஷ்கரணி குளத்தின் கரையை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தனர். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைஅகற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டதன்பேரிலும், தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின்பேரிலும், தாசில்தார் பழனியப்பன் மேற்பார்வையில் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் பிருந்தாதேவி, ஆய்வாளர் கீதாபாய், வருவாய் ஆய்வாளர் மஞ்சு ஆகியோர் முன்னிலையில் பொக்லின் எந்திரம் மூலம் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதற்கு அப்பகுதி குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிமாக நிறுத்தப்பட்டது. அப்போது திருவையாறு ஊராட்சி ஒன்றிய தலைவர் அரசாபகரன், கிராம நிர்வாக அலுவலர் அன்புச்செல்வி ஆகியோர் உடன் இருந்தனர். திருவையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.