ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்

மேல்மலையனூர் அருகே ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

Update: 2022-08-03 16:45 GMT

செஞ்சி:

மேல்மலையனூர் அருகே அன்னப்பள்ளம் கிராமத்தில் 7.89 ஏக்கர் பரப்பளவில் தாங்கல் ஏரி உள்ளது. இதில் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தனர். சிலர் விவசாயம் செய்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதன்பேரில் தாசில்தார் கோவர்த்தனன் முன்னிலையில் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 5 வீடுகள், 2 கிணறுகள், ஒரு கோழிப்பண்ணை உள்ளிட்டவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர். அப்போது வருவாய் துறையினர், ஊரக உள்ளாட்சி துறையினர் உடனிருந்தனர். அவலூர்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்