திருச்சி இ.பி.ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருச்சி இ.பி.ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
திருச்சி இ.பி.ரோடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாநகராட்சி மண்டலம்-2 உதவி ஆணையர் அக்பர்அலி, உதவி செயற்பொறியாளர் லோகநாதன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை இ.பி.ரோடு பகுதியில் கடைகளின் முன்பு ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த மேற்கூரைகள், பேனர்கள், அலங்கார வளைவுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும், உரிய அனுமதியின்றி சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டன. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.