ஸ்ரீரங்கத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஸ்ரீரங்கத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

Update: 2022-12-17 19:08 GMT

108 வைணவ தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகிற 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன.

அம்மாமண்டபம் ரோடு முதல் ராஜகோபுரம், தெற்குவாசல், வடக்குவாசல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி உதவிசெயற்பொறியாளர் பாலமுருகன் மேற்பார்வையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது பாதுகாப்பு பணியில் ஸ்ரீரங்கம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்