பையூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பையூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

Update: 2022-11-08 18:36 GMT

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா பையூரில் அரசு புறம்போக்கு பாப்பான்களம் நீர்வரத்து வாரியில் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக இலுப்பூர் வருவாய் துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் உண்மை கண்டறியப்பட்டதையடுத்து தாசில்தார் வெள்ளைச்சாமி உத்தரவின் பேரில் மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்