கோவில் இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகங்கையில் கோவில் இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2023-04-19 18:45 GMT

சிவகங்கை நகர் மேலூர் ரோட்டில் சிவகங்கை கவுரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 142 ஏக்கர் இடம் உள்ளது. இந்த இடத்தில் பலர் வீடு கட்டியும், கோவில் இடத்தை சுற்றி கம்பி வேலி அமைத்தும் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகள் நேற்று அகற்றப்பட்டது. ஆய நிலங்கள் தனி வட்டாட்சியர் ராஜரத்தினம் முன்னிலையில் கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோவில் செயல் அலுவலர் நாராயணி, இந்து சமய அறநிலை துறை உதவி பொறியாளர் கேசவன் மற்றும் நில அளவர்கள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வேலிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். 

Tags:    

மேலும் செய்திகள்