ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மன்னார்குடி பந்தலடி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
மன்னார்குடி:
மன்னார்குடி பந்தலடி பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. மேலும் இந்த பகுதியில் சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகள் என ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. மேலும் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் பங்குனி திருவிழா தொடங்க இருப்பதால், இந்த பகுதியில் சாமி வீதி உலா நடைபெறும். இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று நகராட்சி பணியாளர்கள் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மன்னார்குடி நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். அப்போது நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.