ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

கோவை அரசு கலைக்கல்லூரி சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது

Update: 2022-12-27 18:45 GMT

கோவை அரசு கலைக்கல்லூரி சாலை, சுங்கம்- உக்கடம் பைபாஸ் சாலையில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

அதன்பேரில் மாநகராட்சி உதவி நகரமைப்பு திட்ட அதிகாரி பாபு, உதவி பொறியாளர் விமல்ராஜ் மற்றும் ஊழியர் கள் நேற்று ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கோவை அரசு கலைக்கல்லூரி அருகே அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த ஆவின் கடையை பொக்லைன் எந்திரம் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

இது போல் உக்கடம் பைபாஸ் சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பெட்டி கடை அகற்றப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், அரசு கலைக் கல்லூரி சாலையில் அனுமதியின்றி ஆவின் பூத் வைக்கப்பட்டு இருந்தது. அந்த கடைக்கு பூட்டு போடப்பட்டது.

ஆனால் உரிய அனுமதியின்றி மீண்டும் திறந்ததால் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த கடை அகற்றப்பட்டது.

அரசு கலைக் கல்லூரி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த பொருட்களும் அகற்றப் பட்டன. நாளை (இன்று) ரத்தினபுரி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்