கீழக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
கீழக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
கீழக்கரை,
கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட கீழக்கரை முக்கு ரோடு முதல் கடற்கரை வரை உள்ள வள்ளல் சீதக்காதி சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்தனர். கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் கீழக்கரை தாசில்தார் சரவணன் தலைமையில் துணை தாசில்தார் பழனி குமார், நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், பொறியாளர் மீரான் அலி, துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லா, கீழக்கரை இன்ஸ்பெக்டர் பாலமுரளி, ஆகியோர் முன்னிலையில் நெடுஞ்சாலை துறையினர் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில் நாளை முதல் ஆம்னி பஸ்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், கனரக வாகனங்கள், சரக்கு லாரிகள் காலை 11 மணி முதல் 3 மணி வரை மட்டும் நகருக்குள் அனுமதிக்கப்படும் என்றும், சீதக்காதி சாலையில் ஒருபுறம் மட்டுமே இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படும் என்றும் தாசில்தார் சரவணன் தெரிவித்துள்ளார்.