இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
தமிழகத்தில் இன்ஸ்பெக்டர்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் இன்ஸ்பெக்டர்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி மதுரை சமூக ஊடக பிரிவில் இருந்து சர்மிளா திண்டுக்கல் சரகத்திற்கும், நாகமலை புதுக்கோட்டையில் இருந்து ஆனந்தகுமார் மதுரை சரகத்திற்கும், நெல்லை எஸ்.பி.சி.டி.யில் பணியாற்றிய இசக்கிதுரை நெல்லை சரகத்திற்கும், மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் இருந்த வெங்கடேசன் மதுரை நகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இது தவிர நெல்லையில் இருந்து வந்த இன்ஸ்பெக்டர் பார்த்திபன் அவனியாபுரத்திற்கும், அங்கிருந்த சந்திரன் தல்லாகுளம் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.