டிரைவர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்

டிரைவர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரத்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார் .

Update: 2023-05-09 19:14 GMT

அன்னவாசல் அருகே காட்டுப்பட்டியை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 19). கிள்ளுக்குளவாய் பட்டியில் உள்ள கல்குவாரியில் இருந்து பொக்லைன் எந்திரத்திற்கு டீசல் நிரப்புவதற்காக மேலே ஓட்டி வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குவாரியில் மண் சரிந்து விழுந்ததால் பொக்லைன் எந்திரத்துடன் கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் பொக்லைன் எந்திரத்தில் சிக்கிக்கொண்டார். அப்போது மண் சரிந்து பொக்லைன் எந்திரத்தின் மீது விழுந்து மூடியது. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் எந்திரத்தில் இருந்து இறந்த நிலையில் லெட்சுமணன் உடலை மீட்டனர். இதனை அறிந்த முன்னாள் அமைச்சரும், விராலிமலை எம்.எல்.ஏ.வுமான விஜயபாஸ்கர் காட்டுப்பட்டியில் உள்ள லெட்சுமணன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்