வறட்சியால் பாதித்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம்

வறட்சியால் பாதித்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-01-14 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வைகை பாசன விவசாய சங்க தலைவர் பாக்கியநாதன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- மாவட்டத்தில் வறட்சியால் நெல்விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது. இதற்கான கணக்கெடுப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது. ரேண்டம் எண் அடிப்படையிலும் பண்ணை குட்டையில் விளைந்த நெல் அடிப்படையிலும் கணக்கெடுப்பு நடந்தால் மாவட்டத்தில் பெய்த மழை அளவின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 100 சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும். மழையின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில் பயிர்கடன் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

=========

Tags:    

மேலும் செய்திகள்