மயிலாப்பூரில் 1,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் -கனிமொழி எம்.பி. வழங்கினார்

'மிக்ஜம்' புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.

Update: 2023-12-17 21:59 GMT

சென்னை,

'மிக்ஜம்' புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் தெருவில் வசிக்கும் 1,000 குடும்பங்களுக்கு தி.மு.க. மேற்கு பகுதி 121-வது வட்டம் சார்பில் தலா 10 கிலோ அரிசி, மளிகை சாமான்கள் உள்பட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் மயிலை வேலு எம்.எல்.ஏ., தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்