நிவாரணம்

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு மீட்க இயலாத 5 படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-30 18:45 GMT

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு மீட்க இயலாத தமிழகத்தை சேர்ந்த படகுகளுக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சமும், பைபர் படகுகளுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 2022-ம் ஆண்டு நாகை மாவட்டத்தில் 12 விசைப்படகுகளுக்கும் மற்றும் 2 நாட்டுப்படகுகளுக்கும் மொத்தம் ரூ.63 லட்சம் வழங்கப்பட்டது. 2-ம் கட்டமாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு மீட்க இயலாத நாகை மாவட்டத்தை சேர்ந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் ரகுபதி தலைமை தாங்கி, 4 விசைப்படகுகள் மற்றும் 1 பைபர் படகிற்கு நிவாரணமாக மொத்தம் ரூ.21 லட்சத்து 50 ஆயிரம் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து படகு உரிமையாளர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகர மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ், ஆத்மா குழு தலைவர்கள் மகா குமார், செல்வ செங்குட்டுவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்