பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த உறவினர் கைது

கருங்கல் அருகே பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த உறவினரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-19 16:00 GMT

குளச்சல்:

கருங்கல் அருகே பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த உறவினரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

பாலியல் பலாத்காரம்

கருங்கல் அருகே உள்ள கம்பிளார் பகுதியை சேர்ந்தவர் ஜாண் செல்வம் (வயது 40), தொழிலாளி. இவருடைய உறவினர் வீடு கருங்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ளது. ஜாண் செல்வம் அடிக்கடி உறவினர் வீட்டுக்கு செல்வது வழக்கம். அந்த உறவினருக்கு பிளஸ்-2 படித்து வரும் மகள் உள்ளார்.

சம்பவத்தன்று ஜாண் செல்வம், உறவினர் வீட்டுக்கு சென்ற போது மாணவியின் தாயார் விறகு எடுக்க சென்றிருந்தார். இதனால், மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வீட்டில் வேறு யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட ஜாண் செல்வம் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் மாணவியின் தாயார் வீட்டுக்கு திரும்பினார். அப்போது, மாணவி இதுபற்றி தாயாரிடம் கூறி கதறி அழுதார். இதைகேட்டு தாயார் அதிர்ச்சி அடைந்தார்.

கைது

பின்னர், இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஜாண் செல்வம் மீது இன்ஸ்பெக்டர் சங்கீதா அன்பு ஜூலியட் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்