கொரோனா வார்டில் சிகிச்சை முறை ஒத்திகை

கொரோனா வார்டில் சிகிச்சை முறை ஒத்திகை நடைபெற்றது.

Update: 2023-04-10 19:32 GMT


விருதுநகர் மருத்துவக்கல்லூரி அரசு ஆஸ்பத்திரியில் 60 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை பிரிவில் அரசு உத்தரவிட்டுள்ளபடி கொரானா சிகிச்சை ஒத்திகை நடைபெற்றது. மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார். மேலும் சிகிச்சை பிரிவு டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு சிகிச்சை முறைகள் பற்றிய நடைமுறைகளை அறிவுறுத்தினார். மேலும் தற்போது இந்த வார்டில் கொரோனா பாதிப்படைந்தவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்கு மணி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்