மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி: ஆறுமுகநேரி பள்ளி அணி 2-வது இடம்

மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் ஆறுமுகநேரி பள்ளி அணி 2-வது இடம் பிடித்தது.

Update: 2022-12-02 18:45 GMT

ஆறுமுகநேரி:

தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டி மதுரையில் நடந்தது. இதில் மதுரை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 38 பள்ளிகளின் அணிகள் கலந்து கொண்டன.

இதில் ஆறுமுகநேரி பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளி அணி 2-வது இடம் பிடித்தது. இந்த அணி வீரர்களை பள்ளி தாளாளர் பி.சுப்பையா, பொதுமேலாளர் எஸ். மபத்லால், பள்ளி முதல்வர் கிறிஸ்டினா பிரபாகரன், துணை முதல்வர் முத்து ஜா, பள்ளி மூத்த பயிற்சியாளர் அமீன், உடற்பயிற்சி ஆசிரியர்கள் தேவ ஆசீர், ஜெயக்குமார் ஆகியோர்

பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்