முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் குறைப்பு..!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு, தேக்கடி ஏரி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்ட்களாக சாரல் மழை பெய்து வந்தது.

Update: 2022-11-04 04:38 GMT

கம்பம்,

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு, தேக்கடி ஏரி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்ட்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை அணை பகுதியில் மழை பெய்யவில்லை.

அதே நேரத்தில் தேனி மாவட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிமாக இருந்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 2,308 கன அடி சென்றது.

இதன் காரணமாக பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வியாழக்கிழமை வினாடிக்கு, 1,667 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை வினாடிக்கு, 511 கன அடியாக வெளியேற்றப்பட்டது.

பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் குறைவாக வெளியேற்றப்பட்டதால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி குறைந்தது. ஒரு மின்னாக்கி மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை அணை நிலவரம்:

நீர்மட்டம், 134.25 அடி(மொத்த உயரம் 152 அடி),

அணையில் நீர் இருப்பு 5691 மில்லியன் கன அடியாகவும்,

நீர் வரத்து வினாடிக்கு 763.03 கன அடியாகவும்,

தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 511 கன அடியாகவும் இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்