தூத்துக்குடியில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

தூத்துக்குடியில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது.

Update: 2022-12-21 18:45 GMT

தூத்துக்குடியில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நேற்று நடந்தது. இதில் 52பெண்கள் உள்பட 389 பேர் பங்கேற்றனர்.

ஊர்க்காவல் படை

தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படைக்கு 35 ஆண்கள் 6 பெண்கள் என 41 பேர் ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல் மற்றும் நேர்காணல் நேற்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள கவாத்து மைதானத்தில் நடந்தது.

389 பேர்

நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி நேர்காணல் நடத்தினார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 52 பெண்கள் உள்பட 389 பேர் பங்கேற்றனர். அவர்களுடையசான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து உயரம் அளக்கப்பட்டன. இதில் தகுதி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.

இதில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜெயராஜ், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசமணிகண்டன், ஈசுவர மூர்த்தி, நடராஜன், ஊர்க்காவல்படை வட்டார தளவாய் பாலமுருகன், துணை வட்டார தளவாய் கவுசல்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்