சேலத்தில் மாயமான முதியவர் கிணற்றில் பிணமாக மீட்பு

சேலத்தில் மாயமான முதியவர் இறந்த நிலையில் கிணற்றில் உடல் மீட்கப்பட்டது.

Update: 2022-06-12 21:37 GMT

சேலம்:

சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள ஒரு கிணற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணையில் இறந்தவரின் பெயர் பழனிசாமி (வயது 60) என்பதும், உடையாப்பட்டி பகுதியில் வசித்து வந்த அவர், அங்கு பன்றி இறைச்சி கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனிடையே கடந்த 9-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்று மாயமான பழனிசாமி தற்போது கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சினையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்