ஆன்லைன் மூலம் திருடிய ரூ.96 ஆயிரம் மீட்பு
வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் திருடிய ரூ.96 ஆயிரம் மீட்கப்பட்டது.
அருப்புக்கோட்டையை சேர்ந்த கவுதம் என்பவர் வங்கி கணக்கிலிருந்து கடந்த 4-ந் தேதி ஆன்லைன் முறையில் ரூ. 96 ஆயிரத்து 248 திருடப்பட்டது. இது பற்றி அவர் 1930 என்ற டெலிபோன் எண் மூலம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் துரித நடவடிக்கை எடுத்து கவுதம் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் முறையில் திருடப்பட்ட ரூ.96 ஆயிரத்து 248-ஐ மீட்டு மாவட்ட சூப்பிரண்டு மனோகர் மூலம் அவரிடம் ஒப்படைத்தனர். துரித நடவடிக்கை எடுத்து ஆன்லைன் மூலம் திருடப்பட்ட பணத்தை மீட்ட சைபர்கிரைம் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பாராட்டினார்.