கிணற்றில் ஆண் பிணம் மீட்பு; போலீசார் விசாரணை

கிணற்றில் ஆண் பிணம் மீட்பு; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-04-11 18:37 GMT

கீரமங்கலம் அருகே கொத்தமங்கலம் வெட்டுக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 42). இவருக்கு திருமணமாகி 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சக்திவேல் மனைவி மேனகா உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அதன் பிறகு மனைவி இறந்த துக்கத்திலிருந்தவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் சக்திவேலை காணவில்லை என்று உறவினர்கள் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது அருகில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் மிதப்பதை பார்த்து கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி அவரை மேலே தூக்கி வந்து பார்த்த போது சக்திவேல் இறந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு வந்த கீரமங்கலம் போலீசார் சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்