ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது. அதை வக்கீல்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-29 18:45 GMT

திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது. அதை வக்கீல்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவிலுக்கு சொந்தமான நிலம்

மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான 6 ஆயிரத்து 876 சதுர அடி பரப்பளவு கொண்ட புஞ்சை நிலம் பூம்புகார்-கல்லணை சாலையில் உள்ளது. இந்த நிலம் ரூபின் சார்லஸ் என்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. அந்த நிலத்தை வணிக பயன்பாட்டிற்கு மாற்றி கட்டிடம் கட்டி மோட்டார் தொழிற் கூடம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தது தெரிய வந்தது.இதுகுறித்து கோர்ட்டில் மயிலாடுதுறை இணை ஆணையர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில் நிலத்தில் இருந்து வெளியேற ரூபின் சார்லசுக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 25-ந் தேதி உத்தரவிட்டார்.

தர்ணா போராட்டம்

இதையடுத்து ரூபின் சார்லசுக்கு கோவில் இடத்தில் இருந்து வெளியேற 15 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறவில்லை. இதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உத்தரவின்படி உதவி ஆணையர் முத்துராமன் தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க முயன்றனர்.அப்போது ரூபின் சார்லஸ் மனைவி பிரேமலதா அதிகாரிகளை தடுத்து தர்ணாவில் ஈடுபட்டார்.

வக்கீல்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

தொடர்ந்து அவரது வக்கீல்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலம் மீட்கப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்