இணைய வழியில் திருடப்பட்ட ரூ.10 லட்சம் மீட்பு

இணைய வழியில் திருடப்பட்ட ரூ.10 லட்சம் மீட்கப்பட்டது.

Update: 2023-02-16 18:45 GMT

திருப்பாச்சேத்தி வைகை மீனாட்சிபுரத்தை சேர்ந்த கோடீஸ்வரன். பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். இவரது வங்கி கணக்கில் தொலைபேசி எண் மாற்றம் செய்து இவருக்கு தெரியாமலேயே ரூ.10 லட்சத்தை மர்மநபர்கள் மோசடி செய்தனர். இதுகுறித்து கோடீஸ்வரன் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தேவி, தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கோடீஸ்வரனின் பணம் அரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஒரு வங்கி கிளைக்கு மாற்றப்பட்டது தெரிந்தது. இதையடுத்து தனிப்படையினர் குர்கானில் உள்ள சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று திருடப்பட்ட பணத்தை மீட்டனர். பின்னர் அதற்கான ஆவணத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், பணத்தின் உரிமையாளர் கோடீஸ்வரனிடம் வழங்கினார். இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து திருடப்பட்ட பணத்தை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்