மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்றை 12-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுகோள்
மாதந்தோறும் பராமரிப்பு உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்றை 12-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் 75 சதவீதம் அதற்கு மேல் கைகள், கால்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டோர் மற்றும் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் பெறும் மாற்றுத்திறனாளிகளை சார்ந்த எவரேனும் வாழ்நாள் சான்று படிவத்தில் கிராம நிர்வாக அலுவலரின் சான்றொப்பத்துடன் மாவட்ட கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் அறை எண் 17-ல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு வருகிற 12-ந்தேதிக்குள் நேரில் வந்து சமர்பித்து 2022-23-ம் நிதியாண்டிற்கான பராமரிப்பு உதவித்தொகையை மாதந்தோறும் தொடர்ந்து பெற்று பயனடையலாம். வாழ்நாள் சான்று வழங்காத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை தொடர்ந்து வழங்க இயலாது. மேலும் இதுவே வாழ்நாள் சான்றிதழ் வழங்கிட இறுதி வாய்ப்பாகும் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.