தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஅலங்காநல்லூர் அரசு பள்ளி ஆசிரியருக்கு வரவேற்பு
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற அலங்காநல்லூர் அரசு பள்ளி ஆசிரியருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அலங்காநல்லூர்
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் நடந்த விழாவில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமாருக்கு தேசிய நல்லாசிரியருக்கான விருதும் சான்றிதழும் வழங்கினார். அவர் நேற்று காலையில் அலங்காநல்லூர் பள்ளிக்கு வந்தார். அவருக்கு மாலை அணிவித்து பள்ளி மாணவர்கள் சார்பில் மயிலாட்டத்துடன், மேளதாளம் முழங்க கேட்டுக்கடை பகுதியில் இருந்து உற்சாகத்தோடு ஊர்வலமாக பஸ் நிலையம் வழியாக பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் கல்யாண முத்தையா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உடன் இருந்து வரவேற்றனர்.