மோட்டார் சைக்கிள் மோதி ரியல் எஸ்டேட் அதிபர் பலி

ஆரணி அருகே மோட்டார் சைக்கிள் மோதி ரியல் எஸ்டேட் அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 போ ்படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-05-08 17:35 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சத்தியமூர்த்தி சாலையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 61), ரியல் எஸ்டேட் அதிபர். இவரும், ரியல் எஸ்டேட் புரோக்கர்களான மனோகரன், அத்திமலைப்பட்டு கிராமத்தை சேர்ந்த காசிநாதன் ஆகிய 3 பேரும் ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனா். அப்போது வேலூர் பகுதியில் இருந்து ஆரணி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென சாலையோரம் நின்றிருந்த ரமேஷ், காசிநாதன் மீது மோதியது. இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் காசிநாதன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் காயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த ரமேசுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ராகேஷ், கௌதம் என்ற 2 மகன்களும், அணு என்ற மகளும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்