ரேஷன் கடை திறப்பு விழா
கம்பம் மாலையம்மாள்புரத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
கம்பம் மாலையம்மாள்புரத்தில் உத்தமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் புதிதாக ரேஷன் கடை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். பின்னர் கார்டுதாரர்களுக்கு பொருட்களை அவர் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ரேஷன் கார்டுதாரர்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் 1,050 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும் என்றார். முன்னதாக 4-வது வார்டு கவுன்சிலர் மாதவன் வரவேற்றார். விழாவில் உத்தமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ராஜாங்கம், தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் குரு இளங்கோ, கம்பம் வடக்கு நகர செயலாளர் வீரபாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.