மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கலா, சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று நெல்லை பழையபேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நெல்லை பழைய பேட்டை நெல்லையாபுரத்தை சேர்ந்த பேச்சிராஜூ என்ற மகாராஜா (வயது 23) தனது மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் ரேஷன் அரிசியையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து பேச்சிராஜூவையும் கைது செய்தனர்.