பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை உயர்வு

பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை உயர்ந்து விற்பனை ஆனதால் கரும்பு ஆலை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-06-05 17:01 GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகாவில் ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பாண்டமங்கலம், நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி சென்று, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்து வருகின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல சந்தையில் சனி மற்றும் புதன்கிழமைகளில் விற்பனை செய்கின்றனர். இந்த ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு வெல்லத்தை வாங்கி செல்கின்றனர்.

கடந்த வாரம் நடந்த ஏலத்தில் 30 கிலோ எடை கொண்ட உருண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் ரூ.1,150 வரை ஏலம் போனது. நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் 30 கிலோ எடை கொண்ட உருண்டை வெல்லம் ரூ.1,180 வரையும், அச்சு வெல்லம் ரூ.1,200 வரையும் விற்பனையானது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் வெல்லம் விலை உயர்ந்து விற்பனை ஆனதால் கரும்பு ஆலை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்