சிவகாசி,
சாத்தூர் அரசு கல்லூரி மற்றும் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியும் இணைந்து சாத்தூரில் ரத்ததான முகாமை நடத்தியது. அரசு கல்லூரி முதல்வர் ஷீலாடேனியல் முகாமை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். டாக்டர்கள் பாலவிக்னேஷ், ராஜ்குமார் தலைமையில் வந்திருந்த மருத்துவக்குழுவினர் மாணவர்களிடம் ரத்தத்தை தானமாக பெற்றனர். ரத்ததானம் செய்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் இளையராணி, கணிதத்துறை பேராசிரியை சூர்யா தேவி ஆகியோர் செய்திருந்தனர்.