தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் அரிய வகை குரங்குகள், மலைப்பாம்புகள் பறிமுதல் - சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் அரிய வகை சிறிய குரங்குகள், மலைப்பாம்புகள், மண்ணுளிப் பாம்புகள், நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-01-13 08:59 GMT

ஆலந்தூர்,

சென்னை விமான நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு பாங்காக்கில் இருந்து தாய் ஏர் ஏசியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றுவிட்டனர். பயணிகளுடைய லக்கேஜ் பேக் எடுக்கும் இடத்தில் இரண்டு ட்ராலி பேக் வெகு நேரமாக இருந்தது. அதை யாரும் எடுக்கவில்லை.

இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமாக வெகு நேரம் இருந்த அந்த இரண்டு ட்ராலிபாகை எடுத்து சோதனை செய்தனர். அது ஸ்கேன் செய்யும் பொழுது அதில் வித்தியாசமான பொருட்கள் இருப்பதாகவும் அது நகர்வதாகவும் தெரிந்தது.

இதையடுத்து அந்த ட்ராலி பேக்கை பிரித்துப் பார்க்கும் பொழுது அதில் பிளாஸ்டிக் டப்பாவில் வன உயிரினங்கள் இருந்தது தெரிய வந்தது. அதில் மூன்று சிறு குரங்குகள், 45 சிறிய பந்து மழைப் பாம்புகள், 3 பிக்னி மெர்மாசெட், இரண்டு நட்சத்திர ஆமைகள், 8 மண்ணுளிப் பாம்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியமாக இருந்தது. சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பயந்து தாய்லாந்தில் இருந்து எடுத்து வந்தவர் சென்னை விமான நிலைய விட்டு சென்றிருக்கலாம் என்று தெரியவந்தது. மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள விலங்கு தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் அந்த உயிரினங்கள் அனைத்தும் தாய்லாந்து நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்