சிறுமியை பலாத்காரம் செய்தவாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை

Update: 2023-01-03 18:45 GMT

திண்டுக்கல் அருகே உள்ள நல்லாம்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 20). இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார். இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சீனிவாசனுக்கு இந்திய தண்டனை சட்டம் 363 (கடத்தல்) பிரிவின் கீழ் 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1,000 அபராதம், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்