இளம் பெண் கற்பழிப்பு:தனியார் வங்கி ஊழியர் மீது வழக்கு
தூத்துக்குடியில் இளம் பெண்ணை கற்பழித்த தனியார் வங்கி ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி சாந்திநகரை சேர்ந்தவர் மதன் (வயது 23). இவர் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு இளம்பெண்ணுடன் பழகி வந்தாராம். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாராம். இதனை அறிந்த அந்த இளம்பெண் மதனிடம் சென்று கேட்டு உள்ளார். அதற்கு திருமணம் செய்த பெண்ணை விவாகரத்து செய்து விட்டு, உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினாராம். தொடர்ந்து அந்த இளம்பெண்ணை ஆசைவார்த்தை கூறி கற்பழித்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணிடம் இருந்து ரூ.1 லட்சம் வாங்கினாராம். இதில் ரூ.60 ஆயிரத்தை திருப்பி கொடுத்து விட்டாராம். மீதி பணத்தை தராமல், அந்த இளம்பெண்ணை மிரட்டினாராம்.
இது குறித்து அந்த இளம் பெண் அளித்த புகாரின் பேரில் மதன் மீது தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.