தேவகோட்டை அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்த விருதுநகர் வாலிபர் உள்பட 4 பேர் கைது

தேவகோட்டை அருகே பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் விருதுநகர் வாலிபர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-12 18:45 GMT

தேவகோட்டை, 

தேவகோட்டை அருகே பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் விருதுநகர் வாலிபர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாலியல் பலாத்காரம்

சிவகங்கை மாவட்டம் ேதவகோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயதான பிளஸ்-1 மாணவிக்கும், பாவனகோட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மாணவியை கடத்தி சென்று தனது வீட்டில் வைத்திருந்தார். இதுகுறித்து மாணவியின் தரப்பில் தேவகோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் ஆகியோர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

பின்னர் மாணவியை மீட்டு கார்த்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் மாணவியிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில் புதுக்கோட்டை மாவட்டம் மீன்மிசலை சேர்ந்த முகமது செரிப், அங்கலான்கோட்டையை சேர்ந்த விஜய், தேவகோட்டையை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் 4 பேர் கைது

இந்தநிலையில் மாணவியிடம் மீண்டும் நடத்திய ெதாடர் விசாரணையில் மேலும் சிலருக்கு அதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன்படி ராஜ்குமார், விருதுநகரை சேர்ந்த சின்னகருப்பு, முத்துசெல்வம், காளையார்கோவிலை சேர்ந்த வசந்தகுமார் ஆகியோரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்