கொல்லிமலை, புளியஞ்சோலையில் வனக்காப்பாளர்கள் இடமாற்றம்

கொல்லிமலை, புளியஞ்சோலையில் வனக்காப்பாளர்கள் இடமாற்றம்;

Update: 2022-06-02 12:50 GMT

சேந்தமங்கலம்:

கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவல்லி வனத்துறை சோதனை சாவடியில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்த காசிமணி நாமகிரிப்பேட்டை அருகே உள்ள திருமனூர் பீட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். முள்ளுக்குறிச்சி வனக்காப்பாளராக பணியாற்றி வந்த புகழேந்தி, காரவல்லி சோதனை சாவடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதேபோல திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள கொல்லிமலை அடிவார பகுதியான புளியஞ்சோலை வனகாப்பாளராக பணியாற்றி வந்த கவாஸ்கர் தலமலை பகுதிக்கும், அங்கு பணியாற்றிய மணிகண்டன் புளியஞ்சோலை பீட்டுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்