ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தீவிரம்

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-09-02 06:13 GMT

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

ராமேசுவரம் ராமநாதசாமிகோவிலுக்கு ஆடி, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். அதுபோல் மாதம் தோறும் வரும் சர்வ அமாவாசை நாட்களிலும் பக்தர்கள் குவிவார்கள்.

முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய அக்னி தீர்த்த கடலில் நீராடி, பூஜை செய்து வழிபடுபடுவதற்கு இது போன்ற அமாவாசை நாட்கள் உகந்த நாளாக கருதப்படுகிறது.

இதனிடையே ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் திறந்து எண்ணப்பட்டு வருகின்றது.கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் திருக்கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.                

Tags:    

மேலும் செய்திகள்